Wednesday, June 23, 2010

ஹர்பஜன் vs அக்தர்


தெளிவாக‌ ப‌டிக்க‌ ப‌ட‌த்தில் கிளிக் செய்ய‌வும்

Sunday, May 16, 2010

லவ் லெட்டர்



கல்லூரி காலங்களில் நான் லவ் பண்றேனு சொல்ற பய புள்ளைகள பாத்தா ரொம்ப பொறாமையா இருக்கும். அதிலும் என் நண்பன் ரமேசுக்கு மாதம் ஒரு முறை ஒரு லவ் லெட்டர் ஹாஸ்டலுக்கு வரும். அதுக்கு பிறகு அவன் உடுற சல்ல இருக்கே அது தான் ரொம்ப கொடுமை. என்னமோ அவன் மட்டும் தான் அங்க ஹீரோ அப்படிங்குற ரெஞ்சுக்கு பில்டப் கொடுப்பான். இந்த பய தூங்குறதே ஒழுங்கா தூங்க மாட்டான், தூக்கத்துல இவன் உருள்றத கண்ட்ரோல் பன்ன டேபிள தூக்கி போட்டாதான் அதுகுள்ளயே உருண்டுகிட்டு கிடப்பான் நாங்க எல்லாம் நிம்மதியா தூங்க முடியும் இவனுக்கு எப்படி லவ் லெட்டர் ! அதுவும் எல்லாரும் படிக்குற மாதிரி போஸ்ட் கார்டுல வருதே எங்கயோ இடிக்குதேனு ரொம்ப நாளா டவுட். அதுக்கு பிறகு கொஞ்சம் அலர்டா வாட்ச் பன்ன ஆரம்பிச்சோம். கரெக்டா இவன் ஊருக்கு போய்ட்டு ரிட்டன் ஆன ஒரு நான்கு நாளைக்குள்ள லவ் லெட்டர் வரும். அப்புறம் எங்க சிபிஐ விசாரனைல உண்மை தெரிந்தது. பய தனக்கு தானே லவ் லெட்டர் போட்டு இருக்கான்னு. என்ன ஒரு குள்ள நரி தனம்.

டிஸ்கி: க‌டைசியாக‌ கிடைத்த‌ த‌க‌வ‌ல் ப‌ய‌ இன்னும் க‌ல்யாண‌த்துக்கு பொண்ணு தேடிட்டு இருக்கான்


Wednesday, May 5, 2010

ரூம் கிரிக்கெட்





பூண்டி க‌ல்லூரி ஹாஸ்ட‌ல் 90 க‌ளில் மிக‌ பிர‌ப‌ல‌மான‌ ஒரு இன்ட்ர‌ஸ்டிங்கான‌ ரூம் கிரிக்கெட். ஹாஸ்ட‌ல் ரூமில் டென்னிஸ் ப‌ந்தில் விளையாட‌ப்ப‌டும் ஒரு வ‌கை கிரிக்கெட். அடிக்க‌ப்ப‌டும் ப‌ந்து நேர‌டியாக‌ சுவ‌ரில் ப‌ட்டால் பேட்ஸ்மேன் அவுட் அது த‌விற‌ ஸ்டெரியிட் கேட்ச், ஒன் பிட்ச் கேட்ச், போல்ட் போன்ற‌வையும் ஒரு பேட்ஸ்மேனை அவுட் ஆக்க‌ உப‌யோகிக்கும் வ‌ழிக‌ள். பேட்ஸ் மேனுக்கு எதிரில் உள்ள‌ சுவ‌ரில் ப‌ந்து உருண்டு சென்று தொட்டால் 4 ர‌ன்க‌ள் , இட‌து , வ‌ல‌து சுவ‌ரில் தொட்டால் 2 ர‌ன்க‌ள். அதிக‌ ர‌ன் அடிக்கும் பேட்ஸ்மேன் அடுத்த‌ ஆட்ட‌த்தில் முத‌லாத‌வ‌தாக‌ பேட் பிடிக்க‌ வாய்ப்பு. த‌ற்போது விளையாடும் 20 - 20 மேட்ச்சை விட‌ இன்ட்ர‌ஸ்டிங்காக‌ இருக்கும். விளையாடி பாருங்க‌ள் உங்க‌ளுக்கும் பிடிக்கும்.

டிஸ்கி: ப‌ல‌ நேர‌ங்க‌ளில் ட‌வுட் ஆப் அவுட் பிர‌ச்ச‌னையில் பிரிந்த‌ ந‌ண்ப‌ர்க‌ள் ப‌டிப்பு முடியும் வ‌ரை எதிரியாக‌வே இருந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளும் நட‌ந்த‌துண்டு.

Wednesday, April 21, 2010

ப‌டித்த‌தில் பிடித்த‌து!















ஏப்ரல் சூரியன்
டீசல் புகை
பேருந்து நெரிசல்
அலுவலக எரிச்சல்
இவையெதிலும் வாடாமல்
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
உனக்குத் தெரியாமல் உதிர்ந்து
யாருக்கும் தெரியாமல் நான் கவர்ந்த
உன் கருங்கூந்தற் சிறுபூவை

-வைரமுத்து

Monday, April 19, 2010

விருதுக்கு ந‌ன்றி

எனக்கு விருது கொடுத்த‌ வ‌லைம‌னை சுகுமார் சுவாமிநாத‌னுக்கு ந‌ன்றி.
அந்த‌ ப‌ட‌ங்க‌ள் உங்க‌ள் பார்வைக்கு

ப‌ட‌ம் 1:























ப‌ட‌ம் 2:




















வ‌லைம‌னைக்கு செல்ல‌ இங்கு சொடுக்க‌வும்




Monday, April 12, 2010

எக்ஸாம்



இன்னும் எக்ஸாம் ஆரம்பிக்க அரை மணி நேரம் இருக்கு. அதுகுல்ல இவனுங்க அத படிச்சியா இத படிச்சியானு வயத்துல புளிய கரைக்குரானுங்க.எல்லாம் நாம விட்ட கான்செப்டா பேசுரானுங்க. சரி விடு கடவுள் மேல பாரத்த போட்டுட்டு போறோம் நடக்குறது நடக்கட்டும்.மணி அடிச்சுட்டு அரகொர விசயத்தோட எக்ஸாம் ஹால்ல போய் அமர்ந்தாச்சு கொஸ்டீன் பேப்பர் வாங்குனதும் பரபரப்பா முதல் கேள்விய பாத்தா ஒன்னும் புரியல. ரெண்டாவது , மூனாவது......பின்னாடி பக்கம்...கடைசி கேள்வி எதுவும் தெரியல. எப்படிடா இது மாதிரி நாம படிக்காததா பாத்து கேட்டு இருக்கானுங்க. நமக்கு இந்த கெமிஸ்ட்ரி ஒத்து வர மாட்டேங்குது. எது நாம படிக்கலயோ அதுலேந்தே கேட்டு இருக்கானுங்க.பின்னாடிலேந்து ஒரு விசும்பல் திரும்பி பாத்தா நண்பனோட கண்ணுலேந்து மடய தொறந்த மாதிரி கண்ணீர்.. என்னடா ஒன்னும் தெரியலயா! அப்பாடா நமக்கு மட்டும் தான் கஷ்டம்னு ஃபீல் பன்னுனோம் பரவயில்ல நமக்கு கம்பேனிக்கு ஒருத்தன் சிக்கிட்டான். சரி அடுத்தவன், அடுத்தவன் என்ன எல்லாரும் முழிக்குறானுங்க..ரொம்ப சந்தோசமா இருந்தது பரவாயில்ல ஒரு குரூப் பார்ம் அகும்போல. சார் ..சத்தம் கேட்டு திரும்பி பார்த்தா என் ஃப்ரண்ட் பிட் ஸ்பெசலிஸ்ட் சிவா அடிஸ்னல் சீட் கேட்டு நின்னுகிட்டு இருந்தான்..என்னாடா அளே இல்லாத கடைக்கு இவன் யாருக்கு டீ ஆத்துறான்.. திடீர்னு ஹால்ல ஒரு பரபரப்பு..செக்ண்ட் இயர் அலைடு கெமிஸ்ட்ரி கொஸ்டீன் அவுட் ஆப் சிலபஸ் எக்ஸாம் போச்ட்பான்ட் , டேட் வில் அனனொன்ஸ் லேட்டர். அப்றம் தான் தெரிந்தது எங்களுக்கு கொடுத்த கொஸ்டீன் மாத்தி கொடுத்துடாங்கனு..அடங்கொய்யால இது கூட தெரியாம நாம ரொம்பத்தான் பீல் பன்னிட்டோம்.

டிஸ்கி: பிட் சிவா சொன்னது எனக்கு அவுட்டாப் சிலபஸ் எல்லாம் முக்கியம் இல்ல மாப்ள..சூப்பர் வைசர் பாக்குறதுக்குல்ல எல்லா பிட்டயும் ஆன்சர் சீட்ல லோட் பன்னிட்டு அப்றம் பொறுமயா கொஸ்டீன் நம்பர மேட்ச் பன்னிடலாம்னு இருந்தேன் இப்படி பன்னிடாங்கலே மாப்ள பிட் எல்லாம் வேஸ்டா போய்டே..

Wednesday, April 7, 2010

நல்லா கேக்குறாங்கயா டீடெய்லு...



இன்ட‌ர்வியூல‌ ச‌க்ச‌ஸ் ப‌ண்ற‌து எப்ப‌டினு யோசன சொல்லுங்க‌ன்ன‌தும் நான் அப்ப‌டியே ஷாக் ஆயிட்டேன்.. நாங்க எல்லாம் ஊருக்குள்ள பல பேருக்கு யோசனை சொல்றவங்க எங்க கிட்டயே வா ரொம்ப‌ க‌டுப்பேத்துறான் மை லார்ட்!, ப‌ட் என‌க்கு அந்த‌ டீலிங் ரொம்ப‌ பிடிச்சி இருந்தது அத‌னால‌ ப‌த்து முக்கிய‌மான‌ யோச‌னை சொல்றேன் கேட்டுக்க‌..

1.கிரைன் சாரி பிரைன் ரொம்ப‌ முக்கிய‌ம்
2.ம‌ங்குனியா இல்லாம‌ க‌க‌க‌போ வா இருக்க‌னும்.
3.தேவையான‌ ஆணிய‌ ம‌ட்டும் புடுங்க‌னும்
4.எதை‌யும் பிளான் ப‌ண்ணி ப‌ன்ன‌னும்.
5.எவ்வ‌ள‌வு அடிச்சாலும் தாங்கிக்க‌னும்(த‌ன்ன‌ம்பிக்கைய‌ சொன்னேன்)
6.நீ குத்து ம‌திப்பாதான் கேட்டியா நான் தான் ஒ‌ல‌ரிடேனானு அடிக்க‌டி ட‌ங்க் சிலிப் ஆக‌ கூடாது.
7.நாங்கெல்லாம் எவ்வ‌ள‌வு பெரிய‌ மூள‌ கார‌ணுங்க‌..(அடிக‌டி ம‌ன‌சுகுள்ள‌ சொல்லிக்க‌னும்)
8. நீ ஒரு அதிகாரிகிட்ட‌ பேசுற‌ங்குர‌த ம‌றந்துடாத‌.
9.பிகர மெய்ன்டைன் பண்னுவியானு கேட்டா அதுக்கென்ன அனுப்பிவையுங்க ஒன்னுக்கு ரெண்டா மெய்டைன் பண்ணுறேனு சொல்ல‌ கூடாது. கணக்கு புத்தகத்துல இருக்குற பிகர் வேற கணக்கு பண்ணுற பிகர் வேற.
10. த்ரிஷா இல்லேன்னா திவ்யா இந்த‌ வேல‌ இல்லாட்டி வேற‌ ஒன்னு டோன்ட் ஒர்ரி பி ஹாப்பி கூல் டொவ்ன் கூல் டொவ்ன் கூல் டொவ்ன்.

இத பார் கடசியா ஒன்ன ஒச்சரிகிறேன் ச்சி எச்சரிக்கிறேன். சைல‌ண்டா வ‌ந்த‌மா ப‌டிச்சமா! பாஸ் ஆனமானு போய்டே இருக்க‌னும் அப்ப‌டி விருப்ப‌ம் இல்லைனா க‌டைசி வ‌ரைக்கும் வேலை வெட்டிக்கு போகாம‌ ஒரு ல‌ட்சிய‌த்தோட‌ வாழ்ந்துகாட்டனும்.


Sunday, March 21, 2010

அர்ஜூன் அம்மா யாரு!


என்ன அர்ஜூன் இன்னைக்கும் வீட்டு பாடம் ஒழுங்கா செய்யலயா! உன் மனசுல என்ன நெனச்சுகிட்டு இருக்க. கைய நீட்டு..இனிமேல் ஒழுங்கா செய்வியா! ஒழுங்கா செய்வியா! அழுது சிவந்த கண்களுடன் வ‌ந்து அம‌ர்ந்த‌ அர்ஜூன் மனம் மட்டும் முனகியது. அம்மா நீ எங்க இருக்க! எப்ப வருவ! நான் உன்ன தினமும் தேடி தேடி தொலைந்து போறேனே! எங்கம்மா இருக்குற! சாமி கிட்ட போய்டதா சொல்றாங்களே எந்த சாமி..டீச்சர் ரொம்ப அடிச்சிட்டாங்கமா..ரொம்ப வலிக்குது... சீக்கிரம் வாமா!


Monday, March 15, 2010

தம்பிக்கு இந்த ஊரு – விமர்சனம்



Thursday, March 11, 2010

ஏழை சிறுவன்...

இது ச‌மீப‌த்தில் நான் இணைய‌த்தில் ப‌டித்த‌ ஹிந்துஸ்தான் டைம்ஸ் வ‌னிதா வாச்த‌வாவின் தொகுப்பின் தமிழாக்க‌ம்.

“ நான் தின‌மும் அனும‌ன் கோயில் வாயிலில் அந்த‌ சிறுவ‌னை பார்ப்பேன்.வெள்ளை ‌T-Shirt ,க‌ருப்பு பேண்ட் போட்டிறுப்பான். ஒரு கூடையில் நிறைய‌ பூ,மாலை வைத்துக்கொண்டு அம‌ர்ந்து இருப்பான்.நான் கோயிலுக்கு செல்லும் பொழுதெல்லாம் என்னிட‌ம் எத‌யாவ‌து வாங்க‌ சொல்லி கேட்பான், நான் கோயிலுக்கு சென்று திரும்பும் போதும் என் காருக்கு அருகில் வ‌ந்து ஒன்னே ஒன்னு வாங்கிகுங்க‌ அக்கா என்று கேட்பான். நான் ஒரு த‌ட‌வை கூட‌ வாங்கிய‌து கிடையாது. அவ‌னுக்கு அருகிலும் நிறைய‌ பேர் பூ விற்பார்க‌ள் அவ‌ர்க‌ள் இவ‌னை போல் வ‌ற்புறுத்தி விற்ப‌து கிடையாது.

ஒரு சில‌ மாத‌ங்க‌ளாக‌ நான் கோயிலுக்கு செல்ல‌வில்லை. இன்று சென்று வ‌ர‌லாம் என்று கோயிலுக்கு சென்றேன். வ‌ழக்க‌ம் போல் கார் கோயிலை நெருங்கும் போது சிறுவ‌ன் தென்ப‌ட்டான்.நான் அவ‌ன் என்னை தொட‌ர்வான் என்று எண்ணி அவ‌னை த‌விற்க நினைத்தேன்.ஆனால் இன்று வ‌ழ‌க்க‌த்துக்கு மாறாக‌ அவ‌ன் என்னை வ‌ற்புறுத்த‌வில்லை. நான் சாமியை த‌ரிச‌ன‌ம் செய்து விட்டு திரும்பும் போதும் என்னை வ‌ற்புறுத்த‌வில்லை. ஒரு வேலை ந‌ம்ம‌ மேல‌ எதாவ‌து கோப‌த்துல‌ இருக்குறானோ என்று எண்ணி.

த‌ம்பி எதுக்கு என்கிட்ட‌ வாங்க‌ சொல்லி நீ கேக்க‌ல‌ ?

நான் எதுக்கு உங்க‌கிட்ட‌ கேக்க‌னும். நீங்க‌ வ‌ச‌தியான‌வ‌ங்க‌, ஆனா ஒரு 5 ரூபாய் கொடுத்து எதுவும் வாங்க‌ மாட்டீங்க‌. பின்ன‌ எதுக்கு கேக்க‌னும். அத‌விட‌ என‌க்கு இத‌ இப்போது விற்று ஆக‌ வேண்டிய‌ க‌ட்டாய‌த்துல‌ நான் இல்ல‌.ஏன்னா என் த‌ங்கை கேன்ச‌ர்ல‌ இர‌ண்டு மாச‌த்துக்கு முன்னாடி செத்து போய்டா..எங்க‌ல‌ விட்டுட்டு எங்க‌ அப்பா போய்டாரு, அவ‌ ம‌ருத்துவ‌ செல‌வுக்கு தான் நான் தின‌மும் எங்க‌ அம்மா க‌ட்டிகொடுக்குற‌ பூவ‌ இங்க‌ வ‌ந்து வித்துகிட்டு இருந்தேன்..இப்ப‌ அவ‌ளே போய் சேந்துட்டா...நீங்க‌ வேணும்னா இன்னைக்கு ஒன்ன‌ free யா எடுத்துக்குங்க‌.....

அன்று அவ‌னிட‌ம் இருந்த‌ எல்லாவ‌ற்ற‌யும் வாங்கி வ‌ந்தாலும் நான் மிக‌வும் குறுகிப்போனேன்...”

ந‌ன்றி: வ‌னிதா வாச்த‌வா, ஹிந்துஸ்தான் டைம்ஸ்

போலி சாமியார்க‌ள் கிட்ட‌ ஏமாறாம‌ல் முடிந்தால் ஒரு ஏழைக்கு உத‌வுங்க‌ள்.,ஏழையின் சிரிப்பில் இறைவ‌னை காணுங்க‌ள்.

Sunday, March 7, 2010

பெரிய‌வ‌ர்

உறுவ‌த்தில் தான் பெரிய‌வ‌ர் அவ‌ர்..ம‌ற்ற‌ப‌டி எங்க‌ளுக்கு அவ‌ர் தான் ந‌ல்ல‌ ந‌ண்ப‌ர். 5 ,6 ம் வ‌குப்பு ப‌டிக்கையில் எங்க‌ள் தெரு ப‌சங்க‌ளுக்கு இவ‌ரை ரொம்ப‌த்தான் பிடிக்கும். அப்போது எங்க‌ள் வீட்டில் TV கிடையாது.வார‌ கடைசியில் எங்க‌ள் ஊர் சினிமா கொட்டகையில் முத‌ல் ஆளாக‌ இவ‌ர் ஆஜ‌ர் ஆகி இருப்பார். இவ‌ர் உட‌ன் அம‌ர்ந்து பட‌ம் பார்ப்ப‌து ஒரு சுக‌ம் தான் . MGR சண்டையில் குதூக‌லிப்ப‌தும், சிவாஜி ந‌டிப்பில் இவ‌ர் ல‌யிப்ப‌தையும் வார்த்தையில் வ‌ர்ணிக்க‌ முடியாது. ஒவ்வொறு சீன் வ‌ருமுன் இவ‌ர் அந்த‌ சீனை விம‌ர்சிப்பார்...சோக‌மான‌ சீன்க‌ளில் அவ‌ரும் அழுது எங்க‌ளையும் தேற்றி..ந‌கைச்சுவை சீன்க‌ளில் வாய் விட்டு ச‌த்த‌மாக‌ சிரித்து..(ப‌ல‌ நேரங்க‌ளில் சிரிப்பும் ,சோக‌மும் அவ‌ருக்கு வ‌ந்த‌பின் தான் எங்க‌ளுக்கு வ‌ரும்) என‌க்கு ந‌ன்றாக‌ ஞாப‌க‌ம் இருக்கு..ஜ‌க‌ன்மோகினி ப‌ட‌த்துக்கு இவ‌ர் உட‌ன் சென்று ப‌ட‌ம் பார்த்த‌‌து. ஆர‌ம்ப‌த்தில் க‌ண்ணை மூடிய‌வ‌ன் தான்...ப‌ட‌ம் முடிந்துதான் க‌ண்ணை தொற‌ந்தேன். இடையில் இவ‌ர் வேறு என் ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் டேய் இவ‌ன் கண்ணை தொற‌க்க‌ மாட்ராண் டா ..என்று போட்டு கொடுக்க‌....அட‌டா..அடுத்த‌ நாள் அவ‌ர் ப‌ட‌ம் பார்க்கும் போது சொன்ன‌ க‌தையை வைத்து நான் ப‌ட‌ம் காட்டுன‌து இப்போது நினைத்தாலும் ம‌ன‌சுக்குள்ள‌ ப‌ட‌ ப‌ட‌க்கும்.இப்போது அவ‌ர் எங்கு இருக்கிறார் என்று தெரிய‌வில்லை.முத‌ல்வ‌ன் ப‌ட‌த்துல‌ சொல்ற‌ மாதிரி டேப் ரிக்கார்டுல‌ இருக்குற‌ ரீவைண்ட் ப‌ட்ட‌ன் மாதிரி வாழ்க்கைல‌ ஒரு ப‌ட்ட‌ன் இருந்தா எவ்வ‌ள‌வு ந‌ன்றாக‌ இருக்கும்....எவ்வ‌ள‌வு எதார்த்தான‌ மான‌ விட‌ய‌ங்க‌ளை ச‌ரியாக‌ அனுப‌விக்காம‌ல் வ‌ந்துவிட்டோம்....ரொம்ப‌ மிஸ் பண்னிடோம் ல‌.....






இப்ப‌டி தா‌ங்க‌ ஆர‌ம்பிச்சேன்..


எல்லாரும் ப்ளாக் எழுதுறத பாத்துட்டு.ஏன் நம்மகிட்ட இருக்குற சரக்குக்கு நாம ஏன்

எழுத கூடாதுனு நானும் எழுத ஆரம்பிசிட்டேன்..என்ன எழுதுறதுன்னு இப்ப முழிசிகிட்டு இருக்குறேன்...

காமெடி எழுதலாம்... அது நமக்கு வரும்... ஆனா வராது..

செண்டிமெண்ட் எழுதலாம்... அத எழுதி என் சோகம் உங்கள தாக்கிட்டா

அரசியல் எழுதலாம்...அந்த கன்றாவி நமக்கு எதுக்கு..

சரி என்ன தான் எழுதுறது ....

எதையாவது எழுதி தொலை அப்படினு நீங்க சொல்றது கேக்குது...

நாங்களும் எழுதுவோம்ல.... யோசிக்கிறேன்...ரூம்போட்டு யோசிக்கிறேன்...

நெக்ஸ்ட்டு மீட் பண்றேன்.