Sunday, March 21, 2010

அர்ஜூன் அம்மா யாரு!


என்ன அர்ஜூன் இன்னைக்கும் வீட்டு பாடம் ஒழுங்கா செய்யலயா! உன் மனசுல என்ன நெனச்சுகிட்டு இருக்க. கைய நீட்டு..இனிமேல் ஒழுங்கா செய்வியா! ஒழுங்கா செய்வியா! அழுது சிவந்த கண்களுடன் வ‌ந்து அம‌ர்ந்த‌ அர்ஜூன் மனம் மட்டும் முனகியது. அம்மா நீ எங்க இருக்க! எப்ப வருவ! நான் உன்ன தினமும் தேடி தேடி தொலைந்து போறேனே! எங்கம்மா இருக்குற! சாமி கிட்ட போய்டதா சொல்றாங்களே எந்த சாமி..டீச்சர் ரொம்ப அடிச்சிட்டாங்கமா..ரொம்ப வலிக்குது... சீக்கிரம் வாமா!


Monday, March 15, 2010

தம்பிக்கு இந்த ஊரு – விமர்சனம்Thursday, March 11, 2010

ஏழை சிறுவன்...

இது ச‌மீப‌த்தில் நான் இணைய‌த்தில் ப‌டித்த‌ ஹிந்துஸ்தான் டைம்ஸ் வ‌னிதா வாச்த‌வாவின் தொகுப்பின் தமிழாக்க‌ம்.

“ நான் தின‌மும் அனும‌ன் கோயில் வாயிலில் அந்த‌ சிறுவ‌னை பார்ப்பேன்.வெள்ளை ‌T-Shirt ,க‌ருப்பு பேண்ட் போட்டிறுப்பான். ஒரு கூடையில் நிறைய‌ பூ,மாலை வைத்துக்கொண்டு அம‌ர்ந்து இருப்பான்.நான் கோயிலுக்கு செல்லும் பொழுதெல்லாம் என்னிட‌ம் எத‌யாவ‌து வாங்க‌ சொல்லி கேட்பான், நான் கோயிலுக்கு சென்று திரும்பும் போதும் என் காருக்கு அருகில் வ‌ந்து ஒன்னே ஒன்னு வாங்கிகுங்க‌ அக்கா என்று கேட்பான். நான் ஒரு த‌ட‌வை கூட‌ வாங்கிய‌து கிடையாது. அவ‌னுக்கு அருகிலும் நிறைய‌ பேர் பூ விற்பார்க‌ள் அவ‌ர்க‌ள் இவ‌னை போல் வ‌ற்புறுத்தி விற்ப‌து கிடையாது.

ஒரு சில‌ மாத‌ங்க‌ளாக‌ நான் கோயிலுக்கு செல்ல‌வில்லை. இன்று சென்று வ‌ர‌லாம் என்று கோயிலுக்கு சென்றேன். வ‌ழக்க‌ம் போல் கார் கோயிலை நெருங்கும் போது சிறுவ‌ன் தென்ப‌ட்டான்.நான் அவ‌ன் என்னை தொட‌ர்வான் என்று எண்ணி அவ‌னை த‌விற்க நினைத்தேன்.ஆனால் இன்று வ‌ழ‌க்க‌த்துக்கு மாறாக‌ அவ‌ன் என்னை வ‌ற்புறுத்த‌வில்லை. நான் சாமியை த‌ரிச‌ன‌ம் செய்து விட்டு திரும்பும் போதும் என்னை வ‌ற்புறுத்த‌வில்லை. ஒரு வேலை ந‌ம்ம‌ மேல‌ எதாவ‌து கோப‌த்துல‌ இருக்குறானோ என்று எண்ணி.

த‌ம்பி எதுக்கு என்கிட்ட‌ வாங்க‌ சொல்லி நீ கேக்க‌ல‌ ?

நான் எதுக்கு உங்க‌கிட்ட‌ கேக்க‌னும். நீங்க‌ வ‌ச‌தியான‌வ‌ங்க‌, ஆனா ஒரு 5 ரூபாய் கொடுத்து எதுவும் வாங்க‌ மாட்டீங்க‌. பின்ன‌ எதுக்கு கேக்க‌னும். அத‌விட‌ என‌க்கு இத‌ இப்போது விற்று ஆக‌ வேண்டிய‌ க‌ட்டாய‌த்துல‌ நான் இல்ல‌.ஏன்னா என் த‌ங்கை கேன்ச‌ர்ல‌ இர‌ண்டு மாச‌த்துக்கு முன்னாடி செத்து போய்டா..எங்க‌ல‌ விட்டுட்டு எங்க‌ அப்பா போய்டாரு, அவ‌ ம‌ருத்துவ‌ செல‌வுக்கு தான் நான் தின‌மும் எங்க‌ அம்மா க‌ட்டிகொடுக்குற‌ பூவ‌ இங்க‌ வ‌ந்து வித்துகிட்டு இருந்தேன்..இப்ப‌ அவ‌ளே போய் சேந்துட்டா...நீங்க‌ வேணும்னா இன்னைக்கு ஒன்ன‌ free யா எடுத்துக்குங்க‌.....

அன்று அவ‌னிட‌ம் இருந்த‌ எல்லாவ‌ற்ற‌யும் வாங்கி வ‌ந்தாலும் நான் மிக‌வும் குறுகிப்போனேன்...”

ந‌ன்றி: வ‌னிதா வாச்த‌வா, ஹிந்துஸ்தான் டைம்ஸ்

போலி சாமியார்க‌ள் கிட்ட‌ ஏமாறாம‌ல் முடிந்தால் ஒரு ஏழைக்கு உத‌வுங்க‌ள்.,ஏழையின் சிரிப்பில் இறைவ‌னை காணுங்க‌ள்.

Sunday, March 7, 2010

பெரிய‌வ‌ர்

உறுவ‌த்தில் தான் பெரிய‌வ‌ர் அவ‌ர்..ம‌ற்ற‌ப‌டி எங்க‌ளுக்கு அவ‌ர் தான் ந‌ல்ல‌ ந‌ண்ப‌ர். 5 ,6 ம் வ‌குப்பு ப‌டிக்கையில் எங்க‌ள் தெரு ப‌சங்க‌ளுக்கு இவ‌ரை ரொம்ப‌த்தான் பிடிக்கும். அப்போது எங்க‌ள் வீட்டில் TV கிடையாது.வார‌ கடைசியில் எங்க‌ள் ஊர் சினிமா கொட்டகையில் முத‌ல் ஆளாக‌ இவ‌ர் ஆஜ‌ர் ஆகி இருப்பார். இவ‌ர் உட‌ன் அம‌ர்ந்து பட‌ம் பார்ப்ப‌து ஒரு சுக‌ம் தான் . MGR சண்டையில் குதூக‌லிப்ப‌தும், சிவாஜி ந‌டிப்பில் இவ‌ர் ல‌யிப்ப‌தையும் வார்த்தையில் வ‌ர்ணிக்க‌ முடியாது. ஒவ்வொறு சீன் வ‌ருமுன் இவ‌ர் அந்த‌ சீனை விம‌ர்சிப்பார்...சோக‌மான‌ சீன்க‌ளில் அவ‌ரும் அழுது எங்க‌ளையும் தேற்றி..ந‌கைச்சுவை சீன்க‌ளில் வாய் விட்டு ச‌த்த‌மாக‌ சிரித்து..(ப‌ல‌ நேரங்க‌ளில் சிரிப்பும் ,சோக‌மும் அவ‌ருக்கு வ‌ந்த‌பின் தான் எங்க‌ளுக்கு வ‌ரும்) என‌க்கு ந‌ன்றாக‌ ஞாப‌க‌ம் இருக்கு..ஜ‌க‌ன்மோகினி ப‌ட‌த்துக்கு இவ‌ர் உட‌ன் சென்று ப‌ட‌ம் பார்த்த‌‌து. ஆர‌ம்ப‌த்தில் க‌ண்ணை மூடிய‌வ‌ன் தான்...ப‌ட‌ம் முடிந்துதான் க‌ண்ணை தொற‌ந்தேன். இடையில் இவ‌ர் வேறு என் ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் டேய் இவ‌ன் கண்ணை தொற‌க்க‌ மாட்ராண் டா ..என்று போட்டு கொடுக்க‌....அட‌டா..அடுத்த‌ நாள் அவ‌ர் ப‌ட‌ம் பார்க்கும் போது சொன்ன‌ க‌தையை வைத்து நான் ப‌ட‌ம் காட்டுன‌து இப்போது நினைத்தாலும் ம‌ன‌சுக்குள்ள‌ ப‌ட‌ ப‌ட‌க்கும்.இப்போது அவ‌ர் எங்கு இருக்கிறார் என்று தெரிய‌வில்லை.முத‌ல்வ‌ன் ப‌ட‌த்துல‌ சொல்ற‌ மாதிரி டேப் ரிக்கார்டுல‌ இருக்குற‌ ரீவைண்ட் ப‌ட்ட‌ன் மாதிரி வாழ்க்கைல‌ ஒரு ப‌ட்ட‌ன் இருந்தா எவ்வ‌ள‌வு ந‌ன்றாக‌ இருக்கும்....எவ்வ‌ள‌வு எதார்த்தான‌ மான‌ விட‌ய‌ங்க‌ளை ச‌ரியாக‌ அனுப‌விக்காம‌ல் வ‌ந்துவிட்டோம்....ரொம்ப‌ மிஸ் பண்னிடோம் ல‌.....


இப்ப‌டி தா‌ங்க‌ ஆர‌ம்பிச்சேன்..


எல்லாரும் ப்ளாக் எழுதுறத பாத்துட்டு.ஏன் நம்மகிட்ட இருக்குற சரக்குக்கு நாம ஏன்

எழுத கூடாதுனு நானும் எழுத ஆரம்பிசிட்டேன்..என்ன எழுதுறதுன்னு இப்ப முழிசிகிட்டு இருக்குறேன்...

காமெடி எழுதலாம்... அது நமக்கு வரும்... ஆனா வராது..

செண்டிமெண்ட் எழுதலாம்... அத எழுதி என் சோகம் உங்கள தாக்கிட்டா

அரசியல் எழுதலாம்...அந்த கன்றாவி நமக்கு எதுக்கு..

சரி என்ன தான் எழுதுறது ....

எதையாவது எழுதி தொலை அப்படினு நீங்க சொல்றது கேக்குது...

நாங்களும் எழுதுவோம்ல.... யோசிக்கிறேன்...ரூம்போட்டு யோசிக்கிறேன்...

நெக்ஸ்ட்டு மீட் பண்றேன்.