Monday, April 12, 2010

எக்ஸாம்



இன்னும் எக்ஸாம் ஆரம்பிக்க அரை மணி நேரம் இருக்கு. அதுகுல்ல இவனுங்க அத படிச்சியா இத படிச்சியானு வயத்துல புளிய கரைக்குரானுங்க.எல்லாம் நாம விட்ட கான்செப்டா பேசுரானுங்க. சரி விடு கடவுள் மேல பாரத்த போட்டுட்டு போறோம் நடக்குறது நடக்கட்டும்.மணி அடிச்சுட்டு அரகொர விசயத்தோட எக்ஸாம் ஹால்ல போய் அமர்ந்தாச்சு கொஸ்டீன் பேப்பர் வாங்குனதும் பரபரப்பா முதல் கேள்விய பாத்தா ஒன்னும் புரியல. ரெண்டாவது , மூனாவது......பின்னாடி பக்கம்...கடைசி கேள்வி எதுவும் தெரியல. எப்படிடா இது மாதிரி நாம படிக்காததா பாத்து கேட்டு இருக்கானுங்க. நமக்கு இந்த கெமிஸ்ட்ரி ஒத்து வர மாட்டேங்குது. எது நாம படிக்கலயோ அதுலேந்தே கேட்டு இருக்கானுங்க.பின்னாடிலேந்து ஒரு விசும்பல் திரும்பி பாத்தா நண்பனோட கண்ணுலேந்து மடய தொறந்த மாதிரி கண்ணீர்.. என்னடா ஒன்னும் தெரியலயா! அப்பாடா நமக்கு மட்டும் தான் கஷ்டம்னு ஃபீல் பன்னுனோம் பரவயில்ல நமக்கு கம்பேனிக்கு ஒருத்தன் சிக்கிட்டான். சரி அடுத்தவன், அடுத்தவன் என்ன எல்லாரும் முழிக்குறானுங்க..ரொம்ப சந்தோசமா இருந்தது பரவாயில்ல ஒரு குரூப் பார்ம் அகும்போல. சார் ..சத்தம் கேட்டு திரும்பி பார்த்தா என் ஃப்ரண்ட் பிட் ஸ்பெசலிஸ்ட் சிவா அடிஸ்னல் சீட் கேட்டு நின்னுகிட்டு இருந்தான்..என்னாடா அளே இல்லாத கடைக்கு இவன் யாருக்கு டீ ஆத்துறான்.. திடீர்னு ஹால்ல ஒரு பரபரப்பு..செக்ண்ட் இயர் அலைடு கெமிஸ்ட்ரி கொஸ்டீன் அவுட் ஆப் சிலபஸ் எக்ஸாம் போச்ட்பான்ட் , டேட் வில் அனனொன்ஸ் லேட்டர். அப்றம் தான் தெரிந்தது எங்களுக்கு கொடுத்த கொஸ்டீன் மாத்தி கொடுத்துடாங்கனு..அடங்கொய்யால இது கூட தெரியாம நாம ரொம்பத்தான் பீல் பன்னிட்டோம்.

டிஸ்கி: பிட் சிவா சொன்னது எனக்கு அவுட்டாப் சிலபஸ் எல்லாம் முக்கியம் இல்ல மாப்ள..சூப்பர் வைசர் பாக்குறதுக்குல்ல எல்லா பிட்டயும் ஆன்சர் சீட்ல லோட் பன்னிட்டு அப்றம் பொறுமயா கொஸ்டீன் நம்பர மேட்ச் பன்னிடலாம்னு இருந்தேன் இப்படி பன்னிடாங்கலே மாப்ள பிட் எல்லாம் வேஸ்டா போய்டே..

2 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nach. bit adichathellam niyabakam varuthuppaaa

GD said...

ந‌ல்ல‌வ‌ரே ..வ‌ருகைக்கு ந‌ன்றி..