Sunday, March 7, 2010

பெரிய‌வ‌ர்

உறுவ‌த்தில் தான் பெரிய‌வ‌ர் அவ‌ர்..ம‌ற்ற‌ப‌டி எங்க‌ளுக்கு அவ‌ர் தான் ந‌ல்ல‌ ந‌ண்ப‌ர். 5 ,6 ம் வ‌குப்பு ப‌டிக்கையில் எங்க‌ள் தெரு ப‌சங்க‌ளுக்கு இவ‌ரை ரொம்ப‌த்தான் பிடிக்கும். அப்போது எங்க‌ள் வீட்டில் TV கிடையாது.வார‌ கடைசியில் எங்க‌ள் ஊர் சினிமா கொட்டகையில் முத‌ல் ஆளாக‌ இவ‌ர் ஆஜ‌ர் ஆகி இருப்பார். இவ‌ர் உட‌ன் அம‌ர்ந்து பட‌ம் பார்ப்ப‌து ஒரு சுக‌ம் தான் . MGR சண்டையில் குதூக‌லிப்ப‌தும், சிவாஜி ந‌டிப்பில் இவ‌ர் ல‌யிப்ப‌தையும் வார்த்தையில் வ‌ர்ணிக்க‌ முடியாது. ஒவ்வொறு சீன் வ‌ருமுன் இவ‌ர் அந்த‌ சீனை விம‌ர்சிப்பார்...சோக‌மான‌ சீன்க‌ளில் அவ‌ரும் அழுது எங்க‌ளையும் தேற்றி..ந‌கைச்சுவை சீன்க‌ளில் வாய் விட்டு ச‌த்த‌மாக‌ சிரித்து..(ப‌ல‌ நேரங்க‌ளில் சிரிப்பும் ,சோக‌மும் அவ‌ருக்கு வ‌ந்த‌பின் தான் எங்க‌ளுக்கு வ‌ரும்) என‌க்கு ந‌ன்றாக‌ ஞாப‌க‌ம் இருக்கு..ஜ‌க‌ன்மோகினி ப‌ட‌த்துக்கு இவ‌ர் உட‌ன் சென்று ப‌ட‌ம் பார்த்த‌‌து. ஆர‌ம்ப‌த்தில் க‌ண்ணை மூடிய‌வ‌ன் தான்...ப‌ட‌ம் முடிந்துதான் க‌ண்ணை தொற‌ந்தேன். இடையில் இவ‌ர் வேறு என் ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் டேய் இவ‌ன் கண்ணை தொற‌க்க‌ மாட்ராண் டா ..என்று போட்டு கொடுக்க‌....அட‌டா..அடுத்த‌ நாள் அவ‌ர் ப‌ட‌ம் பார்க்கும் போது சொன்ன‌ க‌தையை வைத்து நான் ப‌ட‌ம் காட்டுன‌து இப்போது நினைத்தாலும் ம‌ன‌சுக்குள்ள‌ ப‌ட‌ ப‌ட‌க்கும்.இப்போது அவ‌ர் எங்கு இருக்கிறார் என்று தெரிய‌வில்லை.முத‌ல்வ‌ன் ப‌ட‌த்துல‌ சொல்ற‌ மாதிரி டேப் ரிக்கார்டுல‌ இருக்குற‌ ரீவைண்ட் ப‌ட்ட‌ன் மாதிரி வாழ்க்கைல‌ ஒரு ப‌ட்ட‌ன் இருந்தா எவ்வ‌ள‌வு ந‌ன்றாக‌ இருக்கும்....எவ்வ‌ள‌வு எதார்த்தான‌ மான‌ விட‌ய‌ங்க‌ளை ச‌ரியாக‌ அனுப‌விக்காம‌ல் வ‌ந்துவிட்டோம்....ரொம்ப‌ மிஸ் பண்னிடோம் ல‌.....






இப்ப‌டி தா‌ங்க‌ ஆர‌ம்பிச்சேன்..


எல்லாரும் ப்ளாக் எழுதுறத பாத்துட்டு.ஏன் நம்மகிட்ட இருக்குற சரக்குக்கு நாம ஏன்

எழுத கூடாதுனு நானும் எழுத ஆரம்பிசிட்டேன்..என்ன எழுதுறதுன்னு இப்ப முழிசிகிட்டு இருக்குறேன்...

காமெடி எழுதலாம்... அது நமக்கு வரும்... ஆனா வராது..

செண்டிமெண்ட் எழுதலாம்... அத எழுதி என் சோகம் உங்கள தாக்கிட்டா

அரசியல் எழுதலாம்...அந்த கன்றாவி நமக்கு எதுக்கு..

சரி என்ன தான் எழுதுறது ....

எதையாவது எழுதி தொலை அப்படினு நீங்க சொல்றது கேக்குது...

நாங்களும் எழுதுவோம்ல.... யோசிக்கிறேன்...ரூம்போட்டு யோசிக்கிறேன்...

நெக்ஸ்ட்டு மீட் பண்றேன்.

3 comments:

Muthukumar said...

டேப் ரிக்கார்டுல‌ இருக்குற‌ ரீவைண்ட் ப‌ட்ட‌ன் மாதிரி வாழ்க்கைல‌ ஒரு ப‌ட்ட‌ன் இருந்தா எவ்வ‌ள‌வு ந‌ன்றாக‌ இருக்கும்....எவ்வ‌ள‌வு எதார்த்தான‌ மான‌ விட‌ய‌ங்க‌ளை ச‌ரியாக‌ அனுப‌விக்காம‌ல் வ‌ந்துவிட்டோம்....ரொம்ப‌ மிஸ் பண்னிடோம்

Very Nice... Superb....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான் பெரியவர் டைட்டில் பார்த்ததும் உங்களை பத்திய பதிவுன்னு நினைச்சேன். ஹாஹா

GD said...

ஏற‌குறைய‌ அந்த‌ பெரிய‌வ‌ர் உங்க‌ சாய‌ல்ல‌ தான் இருப்பார்..ஹி ஹி ஹி